பெண்ணை மானபங்கப்படுத்த முயன்ற தொழிலாளி கைது

ஊர்காவல் படையை சேர்ந்த பெண்ணை மானபங்கப்படுத்த முயன்ற தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

Update: 2023-07-03 18:45 GMT

தக்கலை:

ஊர்காவல் படையை சேர்ந்த பெண்ணை மானபங்கப்படுத்த முயன்ற தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

தக்கலை அருகே உள்ள காட்டாத்துறை பண்டாரவிளை காலனி பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 43). கூலி தொழிலாளியான இவர் சம்பவத்தன்று வீடு புகுந்து அங்கிருந்த ஊர்காவல் படையில் உள்ள ஒரு பெண்ணை மானப்பங்கப்படுத்த முயன்றார். உடனே அவர் அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டார்.

மேலும் ராஜேஷ் கத்தியை காட்டி மிரட்டியுள்ளார். ஆனால் அந்த பெண் துணிச்சலுடன் தொடர்ந்து சத்தம் போட்டதால் அவர் தப்பி ஓடிவிட்டார்.

மேலும் இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் தக்கலை போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்தநிலையில் நேற்று சுவாமியார் மடத்தில் நின்று கொண்டிருந்த ராஜேஷை, சப் -இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் தலைமையிலான போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்