பொள்ளாச்சியில் பெண்ணை தாக்கிய தொழிலாளி கைது

பொள்ளாச்சியில் பெண்ணை தாக்கிய தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

Update: 2022-09-07 16:15 GMT

பொள்ளாச்சி

பொள்ளாச்சி நேரு நகரை சேர்ந்தவர் பார்த்தசாரதி (வயது 28). இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகன் உள்ளார். இவரது கணவர் வீரமணி கடந்த ஒராண்டுக்கு முன் குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில் வேலைக்கு செல்லும் போது அதே பகுதியை சேர்ந்த தொழிலாளியான கார்த்தி (25) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது.

இதற்கிடையில் பழகிய 2 மாதத்தில் கார்த்தியின் நடவடிக்கை சரியில்லாததால், அவர் பழகுவதை நிறுத்தியதாக தெரிகிறது. இதை தொடர்ந்து தன்னிடம் பேசுமாறு அந்த பெண்ணை அவர் தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பார்த்தசாரதி வீட்டில் இருந்தபோது அங்கு வந்த கார்த்தி மீண்டும் பேசுமாறு கூறியதாக தெரிகிறது.

இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது அந்த பெண்ணை கார்த்தி தகாத வார்த்தையால் திட்டி கன்னத்தில் அடித்ததாக தெரிகிறது. இதுகுறித்து பொள்ளாச்சி கிழக்கு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து அவரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்