நாகர்கோவில்,
நாகர்கோவில் வடலிவிளை பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 39), தொழிலாளி. இவருடைய மனைவி கஸ்தூரி (32). வேல்முருகன் மதுபோதையில் சம்பவத்தன்று கஸ்தூரியிடம் தகராறு செய்தார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த வேல்முருகன், கஸ்தூரியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து வேல்முருகனை கைது செய்தனர்.