மனைவியை தாக்கிய தொழிலாளி கைது
வாலாஜாபேட்டையில் மனைவியை தாக்கிய தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
வாலாஜாபேட்டை- சோளிங்கர் ரோட்டில் வசிப்பவர் மோகன கிருஷ்ணன். இவரது மகன் கந்தன் (வயது 29), கூலி தொழிலாளி. இவரது மனைவி அகமத் நர்கீஸ் (29). இவர்கள் இருவருக்கும் இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டு, கந்தன் தனது மனைவியை அடித்து காயப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து வாலாஜா போலீசில் அகமத் நர்கீஸ் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கந்தனை கைது செய்தனர்.