விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

திருக்காட்டுப்பள்ளி அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-10-18 19:49 GMT

திருக்காட்டுப்பள்ளி;

பூதலூர் அருகே உள்ள கோவில்பத்து வடக்கு தெருவை சேர்ந்தவர் பழனிச்சாமிவயது35). விவசாய தொழிலாளி. இவர் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். சம்பவத்தன்று வயிற்று வலி தாங்க முடியாமல் பழனிச்சாமி வீட்டில் இருந்த களைக்கொல்லி மருந்தை குடித்துவிட்டு மயங்கி விழுந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு பூதலூர் அரசு ஆஸ்பத்திரியில் சோ்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பழனிச்சாமி உயிரிழந்தார். இது குறித்து பூதலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்