தொழிலாளர் தின கிராமசபை கூட்டம்
தேனி மாவட்டத்தில் உள்ள 130 ஊராட்சிகளில் தொழிலாளர் தின கிராமசபை கூட்டம் நடந்தது.
தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தேனி மாவட்டத்தில் உள்ள 130 கிராம ஊராட்சிகளிலும் வருகிற மே 1-ந்தேதி தொழிலாளர் தினத்தன்று கிராமசபை கூட்டம் நடக்கிறது. அந்தந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் தலைமையில் பகல் 11 மணிக்கு இக்கூட்டம் நடக்கிறது. 130 ஊராட்சிகளிலும் மிகச்சிறப்பாகவும், பொதுமக்கள் ஆர்வத்துடனும் கலந்துகொள்ளும் வகையில் கூட்டத்தை நடத்த அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே, அனைத்து ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் கிராமசபை கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.