லேப் டெக்னீசியன் மர்மசாவு

கன்னிவாடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் லேப் டெக்னீசியன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

Update: 2023-08-02 19:45 GMT

கன்னிவாடி அருகே உள்ள தர்மத்துப்பட்டி பழனியூரை சேர்ந்தவர் கனிமுருகன் (வயது 45). லேப் டெக்னீசியன். இவர் கன்னிவாடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேசிய காசநோய் தடுப்பு பிரிவில் தற்காலிக ஊழியராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் காலையில் கனிமுருகன் பணிக்கு வந்தார். அதன்பின்னர் அவர், சுகாதார நிலைய வளாகத்தில் உள்ள பயன்படாத பணியாளர் குடியிருப்புக்கு சென்றதாக கூறப்படுகிறது. நேற்று காலையில் டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள் அந்த குடியிருப்புக்கு சென்று பார்த்தனர். அப்போது கனிமுருகன் இறந்து கிடந்தார். இதுகுறித்து சுகாதாரநிலைய டாக்டர்கள் சிவகாமி, மணிமேகலை, ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் கன்னிவாடி ேபாலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெள்ளையப்பன், சப்-இன்ஸ்பெக்டர் சிவராஜ் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் கனிமுருகன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். இறந்த கனிமுருகனுக்கு இலக்கியா என்ற மனைவி உள்ளார்.

இதற்கிடையே கன்னிவாடி போலீஸ்நிலையத்தில் அவரது மனைவி இலக்கியா புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அதில் கணவர் சாவில் மர்மம் உள்ளதாக கூறியிருந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சுகாதார நிலையத்தில் லேப் டெக்னீசியன் மர்மமான முறையில் இறந்து கிடந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்