கே.வி.குப்பம் ஒன்றியக் குழு கூட்டம்

கே.வி.குப்பம் ஒன்றியக் குழு கூட்டம் நடைபெற்றது.

Update: 2022-07-07 11:49 GMT

கே.வி.குப்பம் ஒன்றியக் குழு கூட்டம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உள்ள மன்றக் கூடத்தில் ஒன்றியக் குழுத் தலைவர் லோ.ரவிச்சந்திரன் தலைமையில் நடந்தது. வட்டார வளர்ச்சி அலுவலர்கள் த.கல்பனா, இ.கோபி, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் மு.அசோக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றியக் குழு துணைத் தலைவர் பாரதி வெங்கடேசன் வரவேற்றார். துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் கே.சீதாராமன், திவ்யாசிவக்குமார், ஜெயாமுருகேசன், சசி, தாமோதர முதலியார், சரஸ்வதி பிரேம்சந்தர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர். அப்போது கெம்மங்குப்பம் பகுதியில் மின்சார வாரியத்தின் மூலம் கொடுக்கப்பட்டுள்ள இணைப்புகளை முழுமையாக செய்ய வேண்டும். தாழ்வாகத் தொங்கிக் கொண்டிருக்கும் மின்சாரக் கம்பிகளை உயர்த்திக் கட்ட வேண்டும். சாலை வசதி செய்து தர வேண்டும். வேப்பங்கனேரிக்கு பாலாற்று குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும், சுடுகாட்டுக்குச் செல்லும் பாதையில் சிறிய பாலம் அமைக்க வேண்டும். விழுந்தாக்கால் பகுதியில் குடிநீர் பிரச்சினையைத் தீர்க்கவேண்டும் என்பது உள்பட அவரவர் பகுதிகளைச் சேர்ந்த பிரச்சினைகளை விளக்கினர். பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பா.வேலு நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்