கே.வி.குப்பம் வட்டார அணி வெற்றி

பொது சுகாதாரத் துறை கிரிக்கெட் போட்டியில் கே.வி.குப்பம் வட்டார அணி வெற்றி பெற்றது.

Update: 2022-10-16 15:05 GMT

பொது சுகாதாரத் துறையின் 100-வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கடந்த 14-ந் தேதி குடியாத்தம் அரசு திருமகள் ஆலைக் கல்லூரியில் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றது. இதில் குடியாத்தம், பேரணாம்பட்டு, கே.வி.குப்பம், காட்பாடி, வேலூர், ஊசூர், அணைக்கட்டு, கணியம்பாடி என 7 வட்டாரத்தை சேர்ந்த சுகாதார துறையினர் 7 அணிகளாகப் பிரிந்து விளையாடினர். இந்த விளையாட்டு போட்டிகளை மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் வெற்றி பெற்ற கே.வி.குப்பம் வட்டார அணியினருக்கு கலெக்டர் குமாரவேல் பாண்டியன், அணியின் கேப்டன் செழியனிடம் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ், கேடயம் ஆகியவற்றை வழங்கினார். கே.வி.குப்பம் வட்டார மருத்துவ அலுவலர் திவ்யா மற்றும் சுகாதாரத்துறையினர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்