முனியப்ப சுவாமி கோவிலில் குட்டிக்குடி திருவிழா

முனியப்ப சுவாமி கோவிலில் குட்டிக்குடி திருவிழா நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

Update: 2023-05-16 18:42 GMT

முனியப்ப சுவாமி கோவில்

கரூர் மண்மங்கலம் முனியப்பனூர் பகுதியில் பிரசித்தி பெற்ற முனியப்ப சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் வைகாசி திருவிழாவையொட்டி நேற்று முன்தினம் காவிரி ஆற்றில் இருந்து வேல் எடுத்து வருதல், தீர்த்தம் கொண்டு வந்து அபிஷேகம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து வெள்ளிக்கவசம் சாத்தப்பட்டு பக்தர்கள் வழங்கிய வண்ண மாலைகளால் சிறப்பு அலங்காரத்தில் முனியப்ப சுவாமி காட்சியளித்தார்.

விழாவின் சிகர நிகழ்ச்சியான குட்டிக்குடி திருவிழா நேற்று நடைபெற்றது.

அருள்வாக்கு

இதையொட்டி பரம்பரை பூசாரி கருப்பசாமி உடையணிந்து தாரை தப்பட்டைகள் முழங்க கோவிலில் இருந்து வேல் ஏந்தி ஆவேசத்துடன் வலம் வந்தார். பின்னர் அங்குள்ள எல்லைச்சாமியை தரிசனம் செய்த பிறகு பக்தர்கள் வரிசையாக நின்று 100-க்கும் மேற்பட்ட கிடா குட்டிகளை நேர்த்திக்கடனாக வழங்கினார்கள். அப்போது அந்த கிடா குட்டிகளின் ரத்தத்தை உறிஞ்சியவாறு அரிவாள் மேல் ஏறி நின்று பூசாரி பக்தர்களுக்கு அருள் வாக்கு கூறினார்.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்