அ.தி.மு.க.பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க உடுமலை சட்டமன்ற தொகுதி சார்பில் அறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் குடிமங்கலம் மேற்கு ஒன்றியம் பெதப்பம்பட்டியில் நடந்தது.
கூட்டத்திற்கு அ.தி.மு.க.மேற்கு ஒன்றிய செயலாளர் அன்பர்ராஜன் தலைமை தாங்கினார்.
உடுமலை நகர செயலாளர் ஹக்கீம், தெற்கு ஒன்றிய செயலாளர் முருகேசன், வடக்கு ஒன்றிய செயலாளர் பிரனேஷ் முன்னிலை வகித்தனர். முன்னதாக எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் ராமநாதன் வரவேற்று பேசினார். கூட்டத்தில் திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ, இலக்கிய அணி செயலாளர் வைகைச்செல்வன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். கூட்டத்தில் ஒன்றிய செயலாளர் இளஞ்செழியன், சுந்தர்ராஜ், மகராஜன், முத்துசாமி, முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் முகுந்தன் நன்றி கூறினார்.