வீரமாகாளியம்மன் கோவிலில் குத்துவிளக்கு பூஜை
வீரமாகாளியம்மன் கோவிலில் குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது.
அரிமளம் ஒன்றியம் ஓணாங்குடி ஊராட்சியில் வீரமாகாளியம்மன் கோவிலில் ஆடி செவ்வாய் குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது. விளக்கு பூஜையொட்டி விநாயகர் பூஜை, லலிதாசராஸ்கரநாமம், 108 போற்றி உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து வீரமாகாளியம்மனுக்கு 11 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதனைதொடர்ந்து குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் 450-க்கு மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு மழை வளம் வேண்டியும், நோய் நொடியற்ற வாழ்வு வேண்டியும், குழந்தை வரம் வேண்டியும் குத்துவிளக்கேற்றி குங்குமத்தால் அர்ச்சனை செய்து வீரமாகாளியம்மனை வழிபட்டனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை ஓணாங்குடி கிராமத்தார்கள் செய்து இருந்தனர்.