குத்தாலம் பேரூர் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

குத்தாலம் பேரூர் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

Update: 2022-09-03 17:06 GMT

குத்தாலம்

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பேரூர் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பேரூர் அ.தி.மு.க. அலுவலகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு பேரூர் செயலாளர் பாலு தலைமை தாங்கினார்‌. குத்தாலம் அ.தி.மு.க. வடக்கு ஒன்றிய செயலாளர் மகேந்திரவர்மன், ஒன்றிய இளைஞரணி செயலாளர் ஜோதிஹரிகிருஷ்ணன், பேரூர் எம்.ஜி.ஆர். இளைஞர்அணி தலைவர் ஜெயபாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட அண்ணா தொழிற்சங்க துணை செயலாளர் மணிசுந்தர் வரவேற்றார். இதில் மயிலாடுதுறை மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் எஸ்.பவுன்ராஜ் கலந்து கொண்டு பேசினார். தொடர்ந்து 6-வது வார்டு பேரூராட்சி மன்ற உறுப்பினர் கல்யாணி சுந்தர் நிதியில் வார்டுக்குட்பட்ட பெண் ஒருவருக்கு ரூ.15 ஆயிரம் மதிப்பில் திருமண சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது. பின்னர் மாற்றுக்கட்சியினர் மாவட்ட செயலாளர் முன்னிலையில் தங்களை அ.தி.மு.க.வில் இணைத்து கொண்டனர். இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர் கபடி பாண்டியன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி தலைவர் ராஜா மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்