குருவிகுளம் ஒன்றியத்தை வறட்சி பகுதியாக அறிவிக்க வேண்டும் -கலெக்டரிடம் ராஜா எம்.எல்.ஏ. மனு
குருவிகுளம் ஒன்றியத்தை வறட்சி பகுதியாக அறிவிக்க வேண்டும் என்று கலெக்டரிடம் ராஜா எம்.எல்.ஏ. மனு கொடுத்தார்.
சங்கரன்கோவில்:
தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ., கலெக்டர் துரை ரவிச்சந்திரனை சந்தித்து மனு அளித்தார். அதில், 'சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி குருவிகுளம் ஒன்றியம் வறட்சி பகுதி என அறிவிக்காமல் விடப்பட்டது. 2022-2023-ம் ஆண்டிற்கான விவசாய நிலங்களுக்கு பயிர் சாகுபடி வறட்சியால் சேதம் அடைந்துள்ளதால், வறட்சி அறிவிக்கப்பட்ட நிலையில் திருவேங்கடம் வட்டம் (குருவிகுளம் ஒன்றியம்) பகுதிக்கு மட்டும் வறட்சி என அறிவிக்காமல் விடுபட்டுள்ளது. மேற்படி திருவேங்கடம் வட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளுக்கு வறட்சி அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறப்பட்டு உள்ளது.