குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலில் தீர்த்தவாரி

குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது.

Update: 2023-07-18 18:45 GMT

தென்திருப்பேரை:

தூத்துக்குடி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலில் கடந்த 11-ந்தேதி கொடை விழா விமரிசையாக நடைபெற்றது. இவ்விழாவில் நேற்று தீர்த்தவாரி நடைபெற்றது. அதை முன்னிட்டு காலை 10 மணிக்கு நாராயணர் பாமா ருக்மணி உடன் தாமிரபரணி ஆற்றில் தீர்த்தவாரி நடந்தது. பின்னர் சப்பரத்தில் நாராயணர், பாமா- ருக்குமணியுடன் வீதி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பக்தர்கள் தேங்காய், பழம் சாற்றி வழிபட்டனர். நிகழ்ச்சியில் சென்னை தெட்சணமாற நாடார் சங்க பொருளாளர் எம். ஜெகதீசன், முருகன் ஹாட் வேர்ட்ஸ் உரிமையாளர் என். ராஜேந்திரன் கே.எம். பிரிக்ஸ் கேசவமூர்த்தி, சென்னை வாழ் நாடார் சங்க தலைவர் சிவா சுப்ரமணியன், துணைத் தலைவர் ஜே. விஜய், செயலாளர் வி.ஜெய்சங்கர், துணைச் செயலாளர் முத்துக்குமார் ஆனந்த், பொருளாளர் சதீஷ்குமார், சத்யா ஸ்டோர் கார்த்திகேயன் வரலட்சுமி ஏஜென்சி அதிபர்கள் முன்னாள் நாடார் சங்க தலைவர் முத்துமாலை, குமரன் டிரைபிஸ் கம்பெனி அதிபர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை குரங்கணி 60 பங்கு நாடார்கள் செய்து இருந்தனர்

Tags:    

மேலும் செய்திகள்