குரங்கனி முத்துமாலை அம்மன் கோவில் கொடைவிழாவில் சுவாமி வீதி உலா
குரங்கனி முத்துமாலை அம்மன் கோவில் கொடைவிழாவில் சுவாமி வீதி உலா நடந்தது.
தென்திருப்பேரை:
குரங்கணி முத்து மாலை அம்மன் கோவில் கொடை விழா நேற்று முன்தினம் விமரிசையாக கொண்டாடப்பட்டது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பத்தினருடன் கோவிலுக்கு வந்து சாமிதரிசனம் செய்தனர். நேற்று காலையில் நாராயணர், பாமாருக்மணியுடன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பக்தர்கள் தேங்காய்,பழம் சாற்றி வழிபட்டனர். இதில் சென்னை தட்சணமாற நாடார் சங்க பொருளாளர் எம்.ஜெகதீசன், முன்னாள் நாடார் சங்க பொருளாளர் ராஜேந்திரன் ஆகியோர் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு வழிபட்டனர்.