தூத்துக்குடியில்குறளோவியம் நூல் ஆய்வு சொற்பொழிவு
தூத்துக்குடியில்குறளோவியம் நூல் ஆய்வு சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது.
தூத்துக்குடியில் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவர் எழுதிய குறளோவியம் நூல் ஆய்வு சொற்பொழிவு தூத்துக்குடி சி.எம்.மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. நிகழ்ச்சிக்கு திருக்குறள் அறிவுசெல்வம் தலைமை தாங்கினார். இளங்கோவன் முன்னிலை வகித்தார். தமிழ் ஆசிரியர் பால்ராசேந்திரம் வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளராக உலக திருக்குறள் பேரவை மாவட்ட செயலாளர் மோ.அன்பழகன் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் ஆசிரியர் அருமைநாயகம், ஸ்ரீதரகணேசன், இவாஞ்சலின், தீபிகா, முருகையா உள்பட பலர் கலந்து கொண்டனர். சாரோன் தொண்டு நிறுவன நிர்வாகி ச.தனராசு நன்றி கூறினார்.