நடுக்காலங்குடியிருப்பு அம்பிைக கோவில் கும்பாபிஷேக விழா
உடன்குடி நடுக்காலங்குடியிருப்பு அம்பிைக கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
உடன்குடி:
உடன்குடி நடுக்காலங்குடியிருப்பு மாதாஅம்பிகை, தெட்சணாமாடசாமி, அன்னை அம்பிகை கோவிலில் கோவிலில் கும்பாபிஷேக விழா 2 நாட்கள் நடந்தது. முதல்நாள் காலை 9 மணிக்கு விநாயகர் பூஜையுடன் மகாகணபதி ஹோமம் நடந்தது. பின்னர் பல்வேறு யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. மாலை 6 முதல் யாக சாலபூஜையும், பஞ்சலோக ஸ்தாபனம், மருந்து சாந்துதல், இரவு 9 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜையை தொடர்ந்து, யாகசாலையில் இருந்து புனித நீர் எடுத்து செல்லப்பட்டு கோபுரகலசங்கள் மற்றும் மாதாஅம்பிகை, தெட்சணாமாடசாமி, அன்னை அம்பிகைக்கு கும்பாபிஷேகம் நடந்தது. பின்பு சுவாமி, அம்பாள்களுக்கு அலங்கார பூஜையுடன் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.