மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா

Update: 2023-02-14 19:30 GMT

கந்தம்பாளையம்:-

கந்தம்பாளையம் அருகே பீச்சபாளையத்தில் அமைந்துள்ள மகா கணபதி, மகா மாரியம்மன், ஓம் காளியம்மன் ஆகிய கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. கடந்த 10-ந்் தேதி கிராம சாந்தியுடன் விழா தொடங்கியது. 11-ந் தேதி விநாயகர் வழிபாடு, கணபதி ஹோமம், தீபாராதனை நடைபெற்றது. பின்னர் பக்தர்கள் காவிரி ஆற்றில் புனித நீர் எடுத்து கோவிலை வந்தடைந்தனர். இதனைத் தொடர்ந்து வாஸ்து பூஜை, முதற்கால யாக பூஜை, காயத்ரி ஹோமம் தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது. தொடர்ந்து இரண்டாம் கால பூஜைகள் நடைபெற்று மகா மாரியம்மன், ஓம் காளியம்மன் கோவிலுக்கு கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது. பின்னர் சாமிகளுக்கு அபிஷேகம், மலர் அலங்காரம் செய்து தீபாராதனை நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாட்டினை கோவில் தர்மகர்த்தா மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்