மகாலிங்க மூர்த்தி, ஆகாச அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்

பாண்டுகுடி கோனேரியேந்தல் மகாலிங்க மூர்த்தி, ஆகாச அய்யனார் கோவில் கும்பாபிஷேகம் நடந்து. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2022-09-12 17:13 GMT

தொண்டி, 

பாண்டுகுடி கோனேரியேந்தல் மகாலிங்க மூர்த்தி, ஆகாச அய்யனார் கோவில் கும்பாபிஷேகம் நடந்து. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

யாகசாலை பூஜை

திருவாடானை தாலுகா பாண்டுகுடி, கோனேரியேந்தல் முருகனேந்தல் கிராமத்தில் விநாயகர், மகாலிங்க மூர்த்தி, பூரணை புஷ்கலை சமேத ஆகாச அய்யனார், வழுதநாயகி அம்மன், கருப்பர் பெரியநாயகி அம்மன், கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. கோவில் முன்பு அமைக்கப் பட்டு இருந்த யாக சாலையில் பாண்டுகுடி கணேச குருக்கள் தலைமையில் சிவாச்சாரியார்களால் யாகசாலை பூஜை நடைபெற்றது

பின்னர் புனித நீர் குடங்களை சிவாச்சாரியார்கள் மேளதாளங்கள் முழங்க தலையில் சுமந்து கோவிலை வலம் வந்தனர். தொடர்ந்து சாமி, அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு வேத மந்திரங்கள் முழங்க பாண்டுகுடி கணேச குருக்கள், கோவிந்தராஜன் பட்டாச்சாரியார் ஆகியோர் தலைமையில் சிவாச்சாரியார்களால் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. கிராம மக்கள் சார்பில் அன்னதானம் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பாண்டுகுடி, கோனேரியேந்தல், முருகனேந்தல், மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பல்லாயிரக் கணக்கான பொதுமக்கள் பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ஏற்பாடு

ஏற்பாடுகளை பாண்டுகுடி உட்கடை கோனேரியேந்தல் முருகனேந்தல் கிராம பொதுமக்கள், கே.ஓ.பி. அண்ட் கோ நிறுவனர் கே.ஓ. பெரியகருப்பன் என்ற பாலு, கே.ஓ.பி. ராமலட்சுமி அம்மாள், பாண்டுகுடி ஊராட்சி தலைவர் வக்கீல் சிங்கதுரை, அமுதா சிங்கத்துரை, எஸ்.எஸ். அண்ட் கோ அரசு முதல் நிலை ஒப்பந்ததாரர் கே.ஒ.பி சுப்பிரமணியன், மகேஸ்வரி சுப்பிரமணியன் மற்றும் குடும்பத்தினர் செய்து இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்