எஸ்.புதூர்,
எஸ்.புதூர் அருகே குளத்துப்பட்டியில் உள்ள மந்தை அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் கணபதி, கோ பூஜையுடன் விழா ஆரம்பமாகி, யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் குடங்கள் கோவிலை வலம் வந்து மந்தை அம்மன், பிடாரி அம்மன், இரளி கருப்பர், பட்டவன் ஆகிய தெய்வங்களுக்கு கோபுரங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த கிராமமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.