வினைதீர்க்கும் விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

வினைதீர்க்கும் விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

Update: 2022-11-04 16:14 GMT

குடியாத்தம் டவுன் சுண்ணாம்புப்பேட்டை உண்டியால் தர்மய்யநாயுடு தெருவில் அமைந்துள்ள வினைதீர்க்கும் விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு கோபூஜை, விக்னேஸ்வரபூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், கலச அலங்காரம், வாஸ்து பூஜை, அங்குரார்ப்பணம், பூர்ணாஹுதி, வேதிகார்ச்சனை, தம்பதி சங்கல்பம் நடைபெற்றது. தொடர்ந்து சிவாச்சாரர்கள் கும்பாபிஷேக கலசங்களை ஏந்திச் சென்று கலச தண்ணீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு மூலவருக்கு சிறப்பு பூஜைகளும், அபிஷேகமும் நடைபெற்றன. தொடர்ந்து மகாதீப ஆராதனையும் அன்னதானமும் வழங்கப்பட்டது.

கும்பாபிஷேக விழாவில் ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள், கலவை சச்சிதானந்த சுவாமிகள், அமலுவிஜயன் எம்.எல்.ஏ., நகர மன்ற தலைவர் எஸ்.சவுந்தரராஜன், ஒன்றியக் குழு தலைவர் என்.இ.சத்யானந்தம், கே.எம்.ஜி.கல்வி நிறுவனங்களின் செயலாளர் கே.எம்.ஜி.ராஜேந்திரன், அரசு மருத்துவமனை ஆலோசனை குழு உறுப்பினர்கள் கள்ளூர் ரவி, நத்தம் பிரதீஷ், ரோட்டரி சங்க ஆளுனர் ஜே.கே.என்.பழனி, வழக்கறிஞர் கே.எம்.பூபதி, நகர மன்ற உறுப்பினர்கள் கன்னிகா பரமேஸ்வரி, ஜி.எஸ்.அரசு, ஆட்டோ மோகன், தொழிலதிபர் வி.ஆர்.எம்.விஜயகுமார், முன்னாள் நகர மன்ற உறுப்பினர்கள் வசந்தாஆறுமுகம், அமுதாகருணா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மாயா கேசவலுநாயுடு குடும்பத்தினர்கள், விழா குழுவினர், ஊர் பெரியவர்கள், இளைஞர் குழுவினர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்