வேலாயி அம்மன், பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்களில் கும்பாபிஷேகம்

வேலாயி அம்மன், பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

Update: 2023-09-03 18:46 GMT

கறம்பக்குடி அருகே பிலாவிடுதியில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த வேலாயி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேக விழா தொடங்கியது. இதையொட்டி கோவில் முன்பு யாகசாலை அமைக்கப்பட்டு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து யாக சாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கலசங்களை சிவாச்சாரியார்கள் கோவில் விமானத்திற்கு கொண்டு சென்றார். பின்னர் வேதமந்திரங்கள் முழங்க வேலாயி அம்மன் கோவில் மூலஸ்தான விமான கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். தொடர்ந்து பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. இதில் பிலாவிடுதி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகள் தங்களது நிலங்களில் விளையும் நெல், சோளம், கரும்பு, மா, பலா, வாழை போன்றவற்றை படையல் செய்து வழிபட்டனர்.

ஆவுடையார்கோவில் அருகே கானூரில் பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேக விழா தொடங்கியது. தொடர்ந்து யாக சாலை பூஜைகள் நடைபெற்றது. பின்னர் யாக சாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீர் அடங்கிய கலசங்களை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து கொண்டு கோவிலை வலம் வந்தனர். தொடர்ந்து வேதமந்திரங்கள் முழங்க பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் மூலஸ்தான விமான கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். பின்னர் பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. இதையடுத்து அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.  

Tags:    

மேலும் செய்திகள்