உஜ்ஜயினி ஓம்காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
உஜ்ஜயினி ஓம்காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
சமயபுரம்:
சமயபுரம் மாரியம்மன் கோவிலின் உப கோவிலான மாகாளிகுடி உஜ்ஜயினி ஓம்காளியம்மன் கோவில் மிகவும் பழமை வாய்ந்த கோவிலாகும். இக்கோவிலில் கடந்த சில மாதங்களாக புனரமைப்பு பணிகள் நடைபெற்றன. இந்த பணிகள் நிறைவடைந்த நிலையில் கடந்த 27-ந் தேதி கும்பாபிஷேகம் நடத்த தீர்மானிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு முகூர்த்தக்கால் நடப்பட்டது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 24-ந் தேதி விக்னேஸ்வர பூஜை, புண்ணியாகவாசனம், கணபதி ஹோமம் நடைபெற்றது. 25-ந் தேதி விக்னேஸ்வர பூஜை, புண்ணியாகவாசனம், ரக்ஷாபந்தனம், அங்குரார்ப்பணம், கடஸ்தாபனம் மற்றும் முதல் கால பூஜையும், 26-ந் தேதி காலை இரண்டாம் கால பூஜையும், மாலை மூன்றாம் கால பூஜையும் நடைபெற்றது. நேற்று காலை நான்காம் கால பூஜையும், அதைத்தொடர்ந்து மகாபூர்ணாஹுதியுடன் தீபாராதனை, யாத்ராதானம் உடன் கடங்கள் புறப்பாடு நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து மூலவர் விமானம், பரிவார விமானங்கள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை வழிபட்டனர்.