ராஜவிநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம்

செந்துறை அருகே ராஜவிநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.

Update: 2022-06-30 16:06 GMT

நத்தம் தாலுகா செந்துறை அருகே தொண்டபுரியில் பிரசித்தி பெற்ற ராஜ விநாயகர், மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கும்பாபிஷேக விழா நடந்தது. இதையொட்டி வினை தீர்க்கும் விநாயகர் வழிபாடு, கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, புனித நதிகளில் இருந்து கலசங்களில் புனித நீர் கொண்டுவருதல், முளைப்பாரி ஊர்வலம், மூலிகை வேள்வி, பிரசாதம் வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

யாகசாலை பூஜைகள் நடந்து முடிந்த பிறகு கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. இதைத்தொடர்ந்து மகா தீபாராதனை காட்டப்பட்டது. அதன்பிறகு ராஜ விநாயகர், மாரியம்மன் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை தொண்டபுரி ஊர் பொதுமக்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்