விளாத்திகுளம் அருகே முத்தாரம்மன் கோவில் கும்பாபிஷேகம்

விளாத்திகுளம் அருகே முத்தாரம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

Update: 2022-07-06 12:35 GMT

எட்டயபுரம்:

விளாத்திகுளம் அருகே உள்ள சிப்பிக்குளம் கிராமத்தில் முத்தாரம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று அதிகாலை 5 மணிக்கு மங்கள இசையுடன் தொடங்கியது. காலை 6 மணியளவில் மஹா கணபதி பூஜை, புண்ணியாகவாஜனம், நான்காம் காலை யாக சாலை பூஜை, பிம்பசுத்தி, நாடி சந்தனம், யாத்ராதானம், தனபூஜை, கோ பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. காலை 7 மணி அளவில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு புனித நீர் கோபுரத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. முத்தாரம்மன் சன்னதியின் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து கோவிலில் மகா அபிஷேகமும் நடைபெற்றது. அம்மனுக்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர், திருநீறு உள்ளிட்ட பொருள்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அலங்கார தீபாராதனை காட்டப்பட்டது. இவ்விழாவில் சிப்பிக்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் குவிந்திருந்து சாமி தரிசனம் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்