மாயா பாண்டீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்

பெரியகுளம் அருகே மாயா பாண்டீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

Update: 2023-02-13 18:45 GMT

பெரியகுளம் அருகே உள்ள மேல்மங்கலம் கிராமத்தில் வராக நதிக்கரையில் அமைந்துள்ள பழமை வாய்ந்த மாயா பாண்டீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் 40 ஆண்டுகளுக்கு பின் மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதற்காக பல்வேறு புண்ணிய நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் குடங்கள் யாகசாலையில் வைக்கப்பட்டது. அங்கு விக்னேஷ்வர பூஜை, விநாயகர் பூஜை உள்ளிட்ட 4 கால யாக பூஜைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து புனித நீரை கோவில் வளாகம் முழுவதும் சுற்றி வந்து மேளதாளம் முழங்க ஊர்வலமாக கொண்டு சென்று கோபுர கலசத்தில் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடந்தது. அதனைத் தொடர்ந்து விமான கலசத்துக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. விழாவில் பெரியகுளம் மற்றும் சுற்று வட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்