மாரியம்மன்கோவில் கும்பாபிஷேகம்
சோழ பாண்டியபுரம் மாரியம்மன்கோவில் கும்பாபிஷேகம் வருகிற 22-ந் தேதி நடக்கிறது
திருக்கோவிலூர்
திருக்கோவிலூர் அருகே உள்ள சோழபாண்டியபுரம் கிராமத்தில் உள்ள மாரியம்மன்கோவில் கும்பாபிஷேக விழா வருகிற 22-ந் தேதி(திங்கள்கிழமை) காலை 6 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் நடக்கிறது. முன்னதாக 21-ந் தேதி மாலை 6 மணி அளவில் அனுக்ஞை, வாஸ்துசாந்தி, பிரவேசபலி, யாகசாலை பூஜைகள் மற்றும் ஹோமங்கள் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை விழா குழுவினர், ஊர் பொதுமக்கள், உபயதாரர்கள் முன் நின்று செய்து வருகின்றனர்.