குனிச்சி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

திருப்பத்தூர் அருகே குனிச்சி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

Update: 2022-07-26 18:22 GMT

திருப்பத்தூர் அருகே உள்ள செல்லரப்பட்டி ஏரிக்கரையில் அமைந்துள்ள குனிச்சி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நிகழ்ச்சி தமிழ் முறைப்படி கடந்த 20-ந்் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

22-ந் தேதி திருவிளக்கு வழிபாடு ,பிள்ளையார் வழிபாடு, ஐங்கரன் வேள்வி, தீர்த்தக்குடம் அழைத்தல், முதற்கால வேள்வி, 108 திராவியாகூதி, மங்கல இசையுடன் இரண்டாம் கால பூஜைகள் நடைபெற்றது.

கந்திகுப்பம் பைரவ சுவாமிகள் தலைமையில் கோபுர கலசங்கள் மீது புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது பக்தர்கள் ஓம் சக்தி பராசக்தி என கோஷங்களை எழுப்பினார்கள்.

சில பெண்கள் சாமி வந்து ஆடினார்கள். தொடர்ந்து புனித நீர் பொதுமக்கள் மீது தெளிக்கப்பட்டது.

பின்னர் மூலஸ்தானத்தில் உள்ள மாரியம்மனுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் ஏ.நல்லதம்பி எம்.எல்.ஏ., மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் கே.எஸ்.அன்பழகன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து மாரியம்மன் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார். அன்னதானம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் பொதுமக்கள், இளைஞர்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்