கருங்காடு புலிக்குட்டி அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்

கருங்காடு புலிக்குட்டி அய்யனார் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

Update: 2023-03-27 19:12 GMT

ஆவுடையார்கோவில்:

திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான ஆவுடையார்கோவில் ஆத்மநாதசுவாமி தேவஸ்தானத்திற்கு உட்பட்ட உபகோவில்களாகிய கருங்காடு பூர்ண, புஷ்கலாம்பிகா சமேத புலிக்குட்டி அய்யனார் கோவில், கருங்காளியம்மன் கோவில், காத்தான் சாம்பான் கோவில் திருப்பணிகள் நிறைவடைந்து கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதையொட்டி யாகசாலை அமைக்கப்பட்டு, கடந்த 25-ந் தேதி கணபதி ஹோமத்துடன் பூஜைகள் தொடங்கியது. இதில் 4 கால யாக பூஜைகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்டு, பூஜிக்கப்பட்ட புனித நீருடன் கடம் புறப்பாடு நடைபெற்றது. இதைத்தொடர்ந்து திருவாவடுதுறை ஆதீனம் 24-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில், சிவாச்சாரியார்கள் யாகசாலையில் இருந்து கடத்தை எடுத்துச்சென்று கோவிலை வலம் வந்தனர். பின்னர் மந்திரங்கள் முழங்க கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக கோபூஜை நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஆவுடையார்கோவில் ஆத்மநாதசுவாமி கோவில் தேவஸ்தான நிர்வாகிகளும், கருங்காடு, தும்பை மலர் கிராம மக்களும் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்