தேவி அழகம்மன் கோவில் கும்பாபிஷேகம்

சாத்தான்குளம் தேவி அழகம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

Update: 2023-02-02 18:45 GMT

சாத்தான்குளம்:

சாத்தான்குளம் தேவிஅழகம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா கடந்த 28-ந்தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. முதல் நாள் விநாயகர் பூஜை, வர்ண பூஜை, கணபதி ஹோமம், கோபூஜை, தீபாராதனை நடந்தது. 5-ஆம் நாளான நேற்று முன்தினம் காலையில் 6-ஆம் கால யாக வேள்வி பூஜை, யாத்ரா தானம், கடம் புறம்பாடு நடந்தது. தொடர்ந்து மூலஸ்தான விமானம், பரிவார விமானங்களுக்கும், மூலஸ்தானத்திற்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் தீபாராதனைைய தொடர்ந்து மகா அபிஷேகம், மகாதீப ஆராதனை நடைபெற்றது. மாலையில் சந்தன காப்பு அம்மாள் சப்பரத்தில் எழுந்தருளி உலா நடைபெற்றது. இரவு சிறப்பு பூஜை, தீபாராதனை, சண்டிகேஸ்வரி பைரவ பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்,

Tags:    

மேலும் செய்திகள்