பகவதி அம்மன்-சக்தி மாரியம்மன் கோவில்களில் கும்பாபிஷேகம்

பகவதி அம்மன்-சக்தி மாரியம்மன் கோவில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

Update: 2022-06-17 19:27 GMT

தொட்டியம், ஜூன்.18-

தொட்டியம் கடைவீதியில் பகவதி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 14-ம்தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. இதை தொடர்ந்து தினமும் யாக வேள்வி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று தீர்த்த குடம் மற்றும் முளைப்பாரி எடுத்து வந்து கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தினர். நேற்று காலை யாகசாலை பிரவேசம் மற்றும் கடம் புறப்பாடு நடைபெற்று விமானங்கள் மீது புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவில் தொட்டியம் மற்றும் சுற்றுப்புற பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல் ராம்ஜி நகர் அருகே உள்ள சத்திரப்பட்டியில் உள்ள சித்திவிநாயகர், சக்தி மாரியம்மன், கல்லாயி அம்மன், பொறைக்கல்லான், பாப்பாத்தி அம்மன், கந்தவடிவேலன் ஆகிய கோவில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்