திருவட்டாரில் கும்பாபிஷேக விழா ஆலோசனை கூட்டம்

திருவட்டாரில் கும்பாபிஷேக விழா குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது.

Update: 2022-06-27 18:07 GMT

திருவட்டார், 

திருவட்டாரில் கும்பாபிஷேக விழா குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது.

கும்பாபிஷேக விழா

திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் கும்பாபிஷேக விழா குறித்த ஆலோசனை கூட்டம் திருவட்டார் தளியல் முத்தாரம்மன் கோவில் அன்னதான மண்டபத்தில் நடந்தது.

கூட்டத்துக்கு சிறப்பு விருந்தினர்களாக திருவட்டார் பேரூராட்சி தலைவி பெனிலா ரமேஷ், சிதறால் புலவர் ரவீந்திரன் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் அடிப்படை வசதிகள் குறைவின்றி செய்து தருமாறு திருவட்டார் பேரூராட்சியை கேட்பது, பக்தர்கள் கும்பாபிஷேக நாளில் சிரமமின்றி கும்பாபிஷேகம் மற்றும் சாமி தரிசனம் செய்ய வசதி செய்து தருமாறும் அறநிலைய துறையைக் கேட்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்