செ.மணப்பட்டி பிடாரி கருப்பசாமி, சின்னடைக்கி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

எஸ்.புதூர் அருகே செ.மணப்பட்டி கிராமத்தில் உள்ள பிடாரி கருப்பசாமி, சின்னடைக்கி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2023-06-02 18:45 GMT

எஸ்.புதூர்

எஸ்.புதூர் அருகே செ.மணப்பட்டி கிராமத்தில் உள்ள பிடாரி கருப்பசாமி, சின்னடைக்கி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சிறப்பு யாகம்

எஸ்.புதூர் ஒன்றியம், செட்டிகுறிச்சி கிராமம், செ.மணப்பட்டி கிராமத்தில் உள்ள பிடாரி கருப்பர் சுவாமி, சின்னடைக்கி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கோவில் திருப்பணிகள் நிறைவுற்றதை தொடர்ந்து கும்பாபிஷேகம் செய்ய விழா குழுவினர் முடிவு செய்தனர். அதன்படி நேற்று கும்பாபிஷேக விழா நடைபெற்றது. முன்னதாக 1-ந் தேதி காலை பகவத் அணுக்கை, விக்னேஸ்வர பூஜை, புண்ணியாக வாஜனம், பஞ்சகவ்ய பூஜை, கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், பூர்ணா குதி நடைபெற்றது. தொடர்ந்து மங்கல இசை, வாஸ்து சாந்தி, பிரவேச பலி, சோமகும்ப பூஜை, ரக்சாபந்தனம், பூத சுத்தி கும்ப அலங்காரம், கும்ப ஸ்தாபன பூஜை, ஆவரண பூஜைகள், அக்னி கார்யம் முதல் கால யாகபூஜை, பூர்ணாகுதி தீபாராதனை நடைபெற்றது.

கும்பாபிஷேகம்

தொ டர்ந்து நேற்று மங்கள இசை, விக்னேஸ்வர பூஜை, துவார மண்டப பூஜை, சூர்ய பூஜை, வேதிகார்ச்சனை, வேதபாராயணம், மூல மந்திர ஹோமம், ஸ்பரிசாகுதி, நாடி சந்தனம், திரவ்யாகுதி, பூர்ணாகுதி நடைபெற்று தீபாராதனை காட்டப்பட்டு கடம் புறப்பாடு நடைபெற்றது. கடங்கள் கோவிலை வலம் வந்து முதலில் பிடாரி கருப்பர் கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டது. தொடர்ந்து சின்னடைக்கி மற்றும் பரிவார தெய்வங்களின் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.

ஏராளமான பக்தா்கள்

பின்னர் கோபுர கலசங்களுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டதை தொடர்ந்து புனிதநீர் பொதுமக்கள் மீது தெளிக்கப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை விழா குழுவினர், செ.மணப்பட்டி இளைஞர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்