திருவேங்கடம்:
தென்காசி மாவட்டம் குருவிகுளம் அடுத்துள்ள அத்திப்பட்டியில் செல்வ விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு கணபதி ஹோமம், யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. பல்வேறு அபிஷேக ஆராதனைகளும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பின்னர் கோவிலில் அமைக்கப்பட்டுள்ள கோபுரத்தில் கலசங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.