எஸ்.பெருமாள் கோவில்பட்டியில் கும்பாபிஷேக விழா

எஸ்.பெருமாள் கோவில்பட்டியில் உள்ள பகவதி அம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா நடந்தது.

Update: 2022-08-31 18:56 GMT

திண்டுக்கல் எஸ்.பெருமாள் கோவில்பட்டியில் விநாயகர், சவுந்தரராஜ பெருமாள், சரஸ்வதி, காளியம்மன், மாரியம்மன், பகவதி அம்மன், கன்னிமார்கள், நவக்கிரகங்கள், மண்டு சுவாமிகளுக்கு கோவில் உள்ளது. இந்த கோவில்களில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. இதையொட்டி நேற்று முன்தினம் மாலையில் யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. அதன்பிறகு இரவு 8 மணியளவில் நகைச்சுவை பட்டிமன்றம் நடந்தது. அதைத்தொடர்ந்து நேற்று காலை 6 மணியளவில் விநாயகர் வழிபாடு, மகா சங்கல்பம் உள்ளிட்ட யாகசாலை பூஜைகள் தொடங்கின.

பின்னர் 9 மணியளவில் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். அனைவர் மீதும் புனித நீர் தெளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அன்னதானம், இரவு 8 மணியளவில் மின் தேரில் விநாயகர் வீதி உலா நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்