குள்ளம்பட்டி ஏரி ரூ.4½ லட்சத்துக்கு ஏலம்
குள்ளம்பட்டி ஏரி ரூ.4½ லட்சத்துக்கு ஏலம் போனது.
தேவூர்:
தேவூர் அருகே அரசிராமணி பேரூராட்சியில் 90 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள குள்ளம்பட்டி ஏரி ஒவ்வொரு ஆண்டும் ஏலம் விடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான ஏலம் பேரூராட்சி அலுவலகத்தில் நடந்தது. பேரூராட்சி தலைவர் காவேரி, துணைத்தலைவர் கருணாநிதி, செயல் அலுவலர் ஜீவானந்தம் ஆகியோர் தலைமையில் இந்த ஏலம் நடந்தது. ஏரியை ஏலம் எடுத்து அதில் மீன் வளர்க்க 29 பேர் முன்வைப்பு தொகை செலுத்தி இருந்தனர். இதில் அரசிராமணி மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த சண்முகம் ரூ.4 லட்சத்து 50 ஆயிரத்துக்கு ஏரியை ஒருவருட குத்தகைக்கு ஏலம் எடுத்தார். இந்த ஏலத்தில் அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.