குளத்துப்பாளையம் பகவதி அம்மன் கோவில் திருவிழா
குளத்துப்பாளையம் பகவதி அம்மன் கோவில் திருவிழா நடந்தது.
நொய்யல் அருகே குளத்துப்பாளையத்தில் பகவதி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழாவை முன்னிட்டு காவிரி ஆற்றில் இருந்து புனிதநீர் எடுத்து கொண்டு கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம் உள்பட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. அதன்பிறகு பெண்கள் பொங்கல் மற்றும் மாவிளக்கு வைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் வாணவேடிக்கை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.