குலசேகரன்பட்டினம் உச்சிமாகாளி அம்மன் கோவிலில் ஆடிப்பூர வளைகாப்பு விழா
குலசேகரன்பட்டினம் உச்சிமாகாளி அம்மன் கோவிலில் ஆடிப்பூர வளைகாப்பு விழா நடந்தது.
குலசேகரன்பட்டினம்:
குலசேகரன்பட்டினம் காவடிபிறை தெரு உச்சி மாகாளி அம்மன் கோவிலில் ஆடிப்பூர வளைகாப்பு விழா கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதனை வளையல்கள் அணிவிக்கப்பட்டு அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
சாத்தான்குளம் அருகே கட்டாரிமங்கலம் சிவகாமி அம்பாள் சமேத அழகியகூத்தர் கோவிலில் ஆடிப்பூர வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் நடராஜபிள்ளை தலைமையில் நிர்வாகிகள், பக்தர்கள் செய்திருந்தனர். இதேபோல் சாத்தான்குளம் பெருமாள் சுவாமி கோவிலிலும் ஆடிப்பூர விழா நடைபெற்றது.