குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவுக்கு வேஷம் போடும் பக்தர்களுக்காகபொருட்கள் தயாரிப்பு தீவிரம்

குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவுக்கு வேஷம் போடும் பக்தர்களுக்காகபொருட்கள் தயாரிப்பு தீவிரமாக நடந்து வருகிறது.

Update: 2022-09-13 10:45 GMT

உடன்குடி:

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா வருகிற 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அடுத்த மாதம் 5-ந் தேதி இரவு 12 மணிக்கு மகிஷா சம்ஹாரம் நடக்கிறது. தசரா திருவிழாவையொட்டி பக்தர்கள் வேஷம் போடும் பக்தர்களுக்குகிரீடம், கண்மலர், நெத்தி பட்டை, வீரப்பல், இடுப்பு ஒட்டியானம், கைப்பட்டை, சூலாயுதம் போன்றவை எடுத்து வருவார்கள். வேடம் அணியும் பக்தர்களுக்கான அலங்கார பொருட்கள் தயாரிப்பு பணியில் உடன்குடி மற்றும் சுற்றுப்புற பகுதியில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். சில பக்தர்கள் தங்களது தலை சுற்றளவை கொடுத்து கீரிடமும், சிலர் இடுப்பு அளவு கொடுத்து ஒட்டியானமும் தயாரிக்கிறார்கள். இதற்கான பணிகள் இப்போதே நடந்து வருகிறது. இதேபோல் மற்ற அலங்கார பொருட்கள் தயாரிப்பு பணியும் நடைபெறுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்