குலசேகரன்பட்டினம்முத்தாரம்மன் கோவில் உண்டியல் எண்ணிக்கை

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் உண்டியல் எண்ணிக்கை நடந்தது.

Update: 2023-01-20 18:45 GMT

குலசேகரன்பட்டினம்:

குலசேகரன் பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்திய உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணிக்கை நடைபெற்றது. கோவிலில் உள்ள 13 உண்டியல்களும் தென்காசி உதவி ஆணையர் கோமதி தலைமையில் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. இதில் ரூ. 32 லட்சத்து 10 ஆயிரத்து 894-ஐ பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். தங்கம் 112 கிராம், 100 மில்லி கிராம், வெள்ளி 664 கிராம், 200 மில்லி கிராம் இருந்தது.

இந்த எண்ணிக்கையில் கோவில் நிர்வாக அதிகாரி ராமசுப்பிரமணியன், ஆய்வாளர் பகவதி, கண்காணிப்பாளர் வெங்கடேஸ்வரி, கணக்கர் டிமிட்ரோ, திருவருள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், தேரியூர் ராமகிருஷ்ண சிதம்பரஸ்வரர் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், பிறை குடியிருப்பு சிவந்தி கலைக் கல்லூரி மாணவிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்