ஈஸ்டர் பண்டிகை முடிந்ததையடுத்து மீண்டும் மீன்பிடிக்கச் சென்ற குளச்சல் விசைப்படகு மீனவர்கள்

புனித வெள்ளி மற்றும் ஈஸ்டர் பண்டிகை முடிந்ததையடுத்து குளச்சல் விசைப்படகு மீனவர்கள் மீண்டும் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க புறப்பட்டுச் சென்றனர்.

Update: 2023-04-10 18:45 GMT

குளச்சல்:

புனித வெள்ளி மற்றும் ஈஸ்டர் பண்டிகை முடிந்ததையடுத்து குளச்சல் விசைப்படகு மீனவர்கள் மீண்டும் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க புறப்பட்டுச் சென்றனர்.

ஈஸ்டர் பண்டிகை

குமரி மாவட்டத்தில் 3 அரசு மீன்பிடித்துறைமுகங்கள், ஒரு தனியார் மீன்பிடித்துறைமுகமும் உள்ளன. இங்கு மீன்பிடித்தொழில் நடந்தாலும், ஆயிரக்கணக்கான மீனவர்கள் கேரளா, குஜராத் மற்றும் கர்நாடகா ஆகிய கடல் பகுதிகளில் மீன்பிடித்தொழில் செய்து வருகின்றனர். இவர்கள் ஊர் திருவிழா, இல்லத்திருமணம் மற்றும் பண்டிகை காலங்களில் மட்டும் ஊருக்கு திரும்புவது வழக்கம்.

கிறிஸ்துமஸ்சை அடுத்து கிறிஸ்தவர்கள் கொண்டாடும் பண்டிகை ஈஸ்டர் ஆகும். இதுவும் கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகையாக கருதப்படுகிறது.

ஊர் திரும்பினர்

அதன்படி கடந்த 7-ந்தேதி புனித வெள்ளி, 9-ந்தேதி ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு கேரளா மற்றும் வெளியூருக்கு சென்ற தொழிலாளர்கள், மீனவர்கள் குடும்பம் மற்றும் உறவினர்களுடன் பண்டிகையை கொண்டாட கடந்த வாரம் ஊருக்கு திரும்பினர். இதுபோல் குளச்சல் துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு ஆழ்கடல் பகுதிக்கு சென்ற விசை படகு மீனவா்களும் கரை திரும்பினர். கரை திரும்பிய விசைப்படகுகள் குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டன. மீனவர்கள் ஈஸ்டர் பண்டிகையையொட்டி கிறிஸ்தவ ஆலயங்களில் நடைபெற்ற சிறப்பு திருப்பலிகளில் கலந்து கொண்டு கொண்டாடினர்.

மீண்டும் மீன்பிடிக்கச் சென்றனர்...

இதையடுத்து ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டம் முடிவடைந்ததை அடுத்து கரை திரும்பிய குளச்சல் விசைப்படகு மீனவர்கள் மீண்டும் நேற்று காலை முதல் ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு புறப்பட்டு சென்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்