கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் மகிதா கைது

அரசு மருத்துவரை மிரட்டி பணம் பறித்த வழக்கில் கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் மகிதா கைது செய்யப்பட்டுள்ளார்.

Update: 2023-07-30 14:41 GMT

சென்னை,

கருக்கலைப்பு தொடர்பாக அரசு மருத்துவரிடம் ரூ.12 லட்சம் கேட்டதாக எழுந்த புகாரில் கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் மகிதா கைது செய்யப்பட்டுள்ளார். செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றம் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த நிலையில் மகிதா தலைமறைவாக இருந்தார். தனிப்படை அமைத்து தேடிய மறைமலை நகர் போலீசார் இன்று கைது செய்தனர். லஞ்ச புகாரை அடுத்து ஏற்கனவே மகிதா சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்