மாணவர்களுக்கு பாராட்டு
விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் பாராட்டப்பட்டனர்.
திசையன்விளையில் வட்டார அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் கூடங்குளம் ஹார்வர்டு ஹைடெக் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பங்கேற்று ஹேண்ட்பால் போட்டியில் சீனியர் மற்றும் சூப்பர் சீனியர் பிரிவுகளில் முதலிடத்தை பிடித்தனர். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தாளாளர் தினேஷ், முதல்வர் முருகேசன், உடற்கல்வி ஆசிரியர் சுந்தர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.