அரசு பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு
தேசிய திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற இண்டூர் அரசு பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
தர்மபுரி:
பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதற்காக ஒவ்வொரு ஆண்டும் தேசிய திறனாய்வு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக 2021-2022- ம் ஆண்டிற்கான தேசிய திறனாய்வு தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் தர்மபுரி மாவட்டம் இண்டூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் பவதாரணி, ஜோதிஸ்ரீ, கமலி, கயல்விழி, கோகிலவாணி, நிசாந்தினி, சிவ பிரசன்னா ஆகிய 7 மாணவிகள் வெற்றி பெற்றனர். இவர்களை பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.