சிலம்ப போட்டியில் வெள்ளிப்பதக்கம் பெற்ற மாணவிக்கு பாராட்டு

சிலம்ப போட்டியில் வெள்ளிப்பதக்கம் பெற்ற மாணவிக்கு பாராட்டு; வேளாங்கண்ணியில் நடந்தது

Update: 2023-08-14 18:45 GMT

வேளாங்கண்ணி:

தமிழ்நாடு அரசின் முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியில் சிலம்பப்பிரிவில் மாநில அளவில் வெள்ளிப்பதக்கம் பெற்ற, நாகை மாவட்டம் தெற்குபொய்கைநல்லூர் பகுதியை சேர்ந்த மாணவி கே.எம்.எஸ்.அகுதரணிக்கு பாராட்டு விழா வேளாங்கண்ணியில் நடந்தது. நிகழ்ச்சிக்கு பிரதாபராமபுரம் ஊராட்சி மன்ற தலைவர் சிவராசு தலைமை தாங்கினார். வேளாங்கண்ணி பேராலய பங்குத்தந்தை அற்புதராஜ், வேளாங்கண்ணி பேரூராட்சி துணைத்தலைவர் தாமஸ் ஆல்வா எடிசன், தெற்குபொய்கைநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் பாண்டித்துரை ஆகியோர் முன்னிலை வகித்தார். முன்னதாக சரவணன் வரவேற்றார். இதில் பேரூராட்சி தலைவர் டயானாஷர்மிளா, தி.மு.க.வேளாங்கண்ணி பொறுப்பாளர் மரியசார்லஸ், வேளாங்கண்ணி முன்னாள் பேரூராட்சி தலைவர் ஜூலியட் அற்புதராஜ், தனியார் பள்ளி சேர்மேன் ஆல்பர்ட்ஜான், தலைமை ஆசிரியர் கார்த்திகேயன், ஆசிரியர் ஆப்ரகாம், சிலம்ப ஆசிரியர் முருகேசன் ஆகியோர் கலந்துகொண்டு மாணவியை பாராட்டினர்.

Tags:    

மேலும் செய்திகள்