மாரத்தானில் தங்கப்பதக்கம் வென்ற மாணவிக்கு பாராட்டு
மாரத்தானில் தங்கப்பதக்கம் வென்ற மாணவிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
உடையார்பாளையம்:
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் கிராமத்தை சேர்ந்த கலியமூர்த்தியின் மகள் தங்கம்(வயது 20). இவர் சென்னையில் உள்ள உடற்கல்வியியல் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற ஆசிய தடகள போட்டியில் மாரத்தான் ஓட்டத்தில் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் வென்றார். இதையடுத்து ஊருக்கு திரும்பிய மாணவியை பொதுமக்கள் உள்ளிட்டோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.