தவற விட்ட பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த பழ வியாபாரிக்கு பாராட்டு

தவற விட்ட பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த பழ வியாபாரிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

Update: 2023-05-18 19:10 GMT

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் தாலுகா, கொணலை ஜே.ஜே. நகரை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன். இவர் நேற்று பெரம்பலூர் நான்கு ரோடு அருகே ரூ.19 ஆயிரத்து 230-ஐ தவற விட்டார். அந்த பணத்தை கண்ட நான்கு ரோடு அருகே தள்ளு வண்டியில் பழங்களை வியாபாரம் செய்யும் சின்னதுரையின் மனைவி கலாமணி எடுத்து யாரும் தேடி வந்தால் கொடுப்பதற்காக வைத்திருந்தார். இந்த நிலையில் பணத்தை தேடி தமிழ்ச்செல்வன் பெரம்பலூர் நான்கு ரோடு அருகே வந்தார். அப்போது கலாமணி தமிழ்ச்செல்வனிடம் பணத்தை வைத்திருந்ததற்கான அடையாளங்களை கேட்டு உறுதிப்படுத்தி கொண்டார். பின்னர் அவர் பெரம்பலூர் போலீசாரை வரவழைத்து, அவர்கள் முன்னிலையில் ரூ.19 ஆயிரத்து 230-ஐ தமிழ்ச்செல்வனிடம் ஒப்படைத்தார். பணத்தை பெற்று கொண்ட தமிழ்ச்செல்வன் கலாமணிக்கு கண்ணீர் மல்க நன்றியை தெரிவித்து கொண்டார். கலாமணியின் செயலை போலீசார் மட்டுமின்றி, பலரும் பாராட்டினர்.

Tags:    

மேலும் செய்திகள்