கோவில்பட்டி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டருக்கு பாராட்டு

தேசியகுற்ற ஆவண காப்பக விருது பெற்ற கோவில்பட்டி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டருக்கு போலீஸ் சூப்பிரண்டு பாலாஜிசரவணன் பாராட்டு தெரிவித்தார்.

Update: 2022-12-20 18:45 GMT

தமிழகத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும் குற்றம் மற்றும் குற்றவாளிகளை கண்காணிக்கும் சி.சி.டி.என்.எஸ் என்ற இணையதள வசதி செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் குற்ற வழக்குகளில் ஈடுபட்டவர்கள், காணாமல் போனவர்கள், திருடு போன வாகனங்கள் போன்றவற்றை கண்டுபிடிப்பதற்கு இந்த இணையதளம் ஏதுவாக உள்ளது. இந்த இணையதள பயன்பாடு குறித்து புதுடெல்லியில் உள்ள தேசிய குற்ற ஆவண காப்பகம் தமிழகத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும் ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வில் சி.சி.டி.என்.எஸ். இணையதளத்தை பயன்படுத்தி குற்ற வழக்குகளில் ஈடுபட்டவர்களை கண்டுபிடித்தல், திருட்டு வாகனங்களை கண்டுபிடித்தல், காணாமல் போனவர்களை கண்டுபிடித்தல் உட்பட பல்வேறு வழக்குகளில் சிறப்பாக பணியாற்றியமைக்காக தமிழ்நாடு போலீஸ் துறையில் 3 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இதில் கோவில்பட்டி கிழக்கு போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வரும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மேரிகலாவும் தேர்வு செய்யப்பட்டு, தேசிய குற்ற ஆவண காப்பகம் விருது வழங்கியது. இதனை தொடர்ந்து விருது பெற்ற சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மேரிகலாவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பரிசு வழங்கி பாராட்டினார். அப்போது, சைபர் குற்றப்பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு லயோலா இக்னேசியஸ், விளாத்திகுளம் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரேயா குப்தா, மாவட்ட சி.சி.டி.என்.எஸ் சப்-இன்ஸ்பெக்டர் விக்டோரியா அற்புதராணி ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்