மதுக்கூர் அரசு பள்ளி மாணவருக்கு பாராட்டு

ரஷ்யாவின் கென்னடி ராக்கெட் தளத்திற்கு செல்ல தேர்வாகி உள்ள மதுக்கூர் அரசு பள்ளி மாணவருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

Update: 2023-04-10 18:45 GMT

மதுக்கூர்:

அரசு பள்ளி மாணவர்களுக்கான ராக்கெட் சயின்ஸ் என்ற பயிற்சி வகுப்பை தமிழக அரசு நடத்தியது. இந்த பயிற்சி வகுப்பில் தமிழகம் முழுவதும் உள்ள 500 மாணவர்கள் கலந்து கொண்டனர். பயிற்சியில் நடந்த தேர்வில் 75 மாணவர்கள் தேர்வாகியுள்ளனர். அதில் 9 பேர் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்தவர்கள். இதில் மதுக்கூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர் சந்தோஷ் மாநில அளவில் முதல் 30 இடங்களுக்குள் தேர்வாகி உள்ளார். இவர் அரசு நிதி உதவியுடன் ரஷ்யாவின் கென்னடி ராக்கெட் ஏவுதளத்திற்கு செல்வ தேர்வாகியுள்ளார். நேற்று மதுக்கூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு நீட் பயிற்சி மைய தொடக்க விழாவிற்கு தஞ்சை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவகுமார் வந்தார். அப்போது ரஷ்யா செல்ல தேர்வாகியுள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர் சந்தோஷ், ராக்கெட் சயின்ஸ் திட்டத்தின் பள்ளி ஒருங்கிணைப்பாளர் ஓவியரசன் ஆகியோருக்கு சால்வை அணிவித்து நினைவுப் பரிசுகள் வழங்கி பாராட்டினார். இதில் மதுக்கூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் பிரகாஷ், மதுக்கூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியை தமிழ்ச்செல்வி, உதவித்தலைமையாசிரியர் மாணிக்கம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்